மராவதி

ந்திர மாநிலத்தின் இடைக்கால உயர்நீதிமன்ற வளாகத்தை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட ஆந்திர பிரதேச மாநிலம் தற்போது அமராவதியை தலைநகராக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நகரில் பல புதிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு சில முக்கிய அலுவலகங்கள் பழைய ஆந்திரா மற்றும் தற்போதைய தெலுங்கானா மாநில தலை நகரான ஐதராபாத்தில் இயங்கி வருகின்றன.

அவ்வரிசையில் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில உயர்நீதிமன்றங்கள் ஐதராபாத்தில் ஒரே வளாகத்தில் இயங்கி வந்தன.    மாநிலங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவின் தலைநகர் அமராவதியில் இருந்து ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் உயர்நீதிமன்றக்  கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன.  சுமார் 150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்நீதிமன்ற கட்டிடம் 2.70 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் இரு மாடிகளுடன் கொண்ட இக்கட்டிடத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது தற்காலிகமாக வேறு ஒரு வளாகத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் இயங்க உள்ளது. அந்த வளாகத்தை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார். புதிய கட்டிட வேலைகள் முடிந்ததும் நீதிமன்றம் அந்த கட்டிடத்துக்கு மாற்றப்பட உள்ளது.