மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்-அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் அங்குள்ள ’ரிம்ஸ்’ மருத்துவமனையில் லாலு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லாலுவை, அவரது மனைவி ராப்ரிதேவி, பீகார் எதிர்க்கட்சி தலைவரான அவரது மகன் தேஜஸ்வி யாதவ், மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகள் மிசா பாரதி ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேஜஸ்வி “லாலு பிரசாத் யாதவுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . 25 சதவீதம் ‘கிட்னி’ மட்டுமே செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

“லாலுவின் உடல்நிலை மோசமாக உள்ளது எனவே ஜார்கண்ட் முதல்-அமைச்சர் ஹேமந்த் சோரனை இன்று நேரில் சந்தித்து, லாலுவுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்வேன்” என்று தேஜஸ்வி மேலும் கூறினார்.

– பா. பாரதி