பாட்னா

லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பீகார் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தி ஐஸ்வரியா ராய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

பீகாரின் முன்னாள் முதல்வர் தரோகா ராய்.  இவர் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்.   இந்த சமூகத்தில் முதலில் முதல்வராக பதவி ஏற்றவர் இவர் என்னும் பெருமை உடையவர்.    அத்துடன் லாலு பிரசாத் யாதவின் கூட்டணி அரசில் இவர் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தவர்.

தரோகா ராயின் மகள் சந்திரிகா ராய்.   இவரும் முன்னாள் அமைச்சர் ஆவார்.   சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்.   குடும்பத்தின் முதல் மகளான ஐஸ்வர்யா நொய்டாவில் எம் பி ஏ படிப்பு முடித்தவர்.   இவருடைய தம்பி சட்டம் படித்துக் கொண்டு இருக்கிறார்.  தங்கை பொறியாளர் ஆவார்.

 

ஐஸ்வர்யா ராய் – தேஜ் பிரதாப் யாதவ் நிச்சய தார்த்தம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடக்க உள்ளது.  இவர்கள் திருமணம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி பாட்னா நகரில் நடைபெற உள்ளது.   இந்த தகவலை பெண் வீட்டார் உறுதி செய்துள்ளனர்.    தேஜ் பிரதாப் யாதவின் சகோதரர் தேஜஸ்வி யாதவும் இந்த தகவல் உறுதி செய்துள்ளார்

மேலும் மகனின் திருமணத்தை ஒட்டி லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் கோரி மனு அளிக்கப் பட்டுள்ளதாக  ராஷ்டிரிய ஜனத தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.