அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித் கோமாளி 2′ போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டார் ஆர்யா.
தற்போது அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இணையத்தில் பெரும் வைரலான ‘அஸ்கு மாரோ’ படத்தில் கவினுடன் நடனமாடியவர் தேஜ் அஸ்வினி என்பது குறிப்பிடத்தக்கது.