நியூயார்க்: பருவநிலை மாற்ற நிகழ்வுகளை முன்வைத்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 16 பதின்ம வயதினர், நாட்டு அரசுகளின் மீது குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தியாவின் உத்ரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிதிமா பாண்டே என்ற பெண்ணும் இவர்களுள் அடக்கம்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நாட்டு அரசாங்கங்களின் பொறுப்பற்ற செயல்களால் எப்படி தங்களின் வாழ்வுரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, அர்ஜெண்டினா, பிரேசில், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த 5 நாடுகளும் தங்களின் மக்களுக்கு நல்வாழ்வு தருவதாக ஐ.நா. மன்றத்தில் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டவை.
ஆனால், அந்நாட்டு அரசுகளின் நடவடிக்கைகளால் சீரழியும் சுற்றுப்புற சீர்கேடுகளால் மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளன மற்றும் தங்களின் வாக்குறுதிகளை மீறிவிட்டன அந்த அரசுகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் ரிதிமா பாண்டே, தனது குடும்பத்துடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக, நைனிடாலில் இருந்து ஹரித்துவாருக்கு குடிபெயர்ந்தார். கன்வார் யாத்ரா என்ற திருவிழாவையொட்டி, கங்கை நதியில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான, கேடு விளைவிக்கும் மாறுபாடுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.