போல்பூர்:

மேற்கு வங்க மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீராங்கனை கழுத்தில் அம்பு பாய்ந்தது.

மேற்கு வங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் நகரில் கிரீரா கேந்திரா என்ற வில் வித்தை பயிற்சி மையம் உள்ளது.
இங்கு பசில்லா கத்தூன் என்ற இளம் வீராங்கனை பயிற்சி பெற்று வருகிறார். இன்று இந்த மையத்தில் 3 வில்வித்தை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.

இதில் ஜுவல் ஷேக் என்ற வீரர் தனது இலக்கை குறி வைத்து அம்பு எய்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக பசில்லா திடீரென அதன்முன் வந்து நின்றுள்ளார். இதில் அம்பு பின்பிறத்தில் இருந்து அவரது வலது கழுத்தில் பாய்ந்து நின்றது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் அவரது நிலைமை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]