சென்னை:  சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் ஆன்லைனில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுவழயில்டிக்கெட் எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை மக்களிடையேபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பயனர்களுக்கு ஆன்லைன், வாட்ஸ்அப் என பல தளங்கள் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை முதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் புகார்கள் வந்தன.

இதையடுத்த, மெட்ரோநிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Whatsapp Chatbot மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தற்காலிகமாக இயங்கவில்லை என்றுதெரிவித்துள்ளது.

பயணிகள் அனைவரும் CMRL மொபைல் ஆப், Paytm, Phonepe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள், பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகிய மற்ற வழிகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.