கணவனின் தோற்றத்தை கிண்டல் செய்தால்  விவாகரத்து: உயர்நீதிமன்றம்

Must read

தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தாலும் விவாகரத்து கோர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த  நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,  விவாகரத்து கோரி, கடந்த வருடம் குடும்ப நல கோர்ட்டில் வழக்குத்தொடுத்தார். தனது தோற்றத்தை மனைவி கேலி செய்வதாகவும் அதனால் மனம் புண்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மணமகள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.

மனு சாரித்த நீதிபதிகள்,விவாகரத்தை உறுதி செய்தனர். ‘தோற்றத்தை வைத்து  கணவனை  மனைவி கிண்டல் செய்வதும் ஏற்க முடியாத விசயம்தான். இதன்  அடிப்படையில் விவாகரத்து வழங்கலாம்” என் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

More articles

Latest article