திருப்பத்தூர்:
சிரியரை மிரட்டிய விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார்.  இதனை சில மாணவர்கள் பொருட்படுத்தாமல் நோட்டு சமர்ப்பிக்காமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை தட்டிக் கேட்டார். அப்போது சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். மேலும் 2 மாணவர்கள் அவரது அருகே சென்று அவரை அடிப்பது போல் பாய்ந்து அருகில் சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர்.

மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.