சென்னை,
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங் கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டெட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாதம் 22-ம் தேதி வரை விண்ணப் பங்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி உள்பட மேலும், 17 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் மார்ச் 23ந் தேதியாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட கல்வி அலுவலகம் உள்பட தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மையங்களில் நேரில் சமர்ப்பிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு விண்ணப்பத்தின் கட்டணம் 50 ரூபாய். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.
தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.