டில்லி:

ழலையர் பள்ளிகளில், மழலையர்களுக்கு அந்தந்த மாநில தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும்  என்று  தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஆர்டி) (The National Council of Educational Research and Training (NCERT)) பள்ளிக் கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளைக் கூறுவதற்காக மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் தொடங்கப்பட்டது.

பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. கல்வி தொடர்பாக பல்வேறு கொள்கைகளை அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி. வகுக்கும் கல்வித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. மாநிலக் கல்வி வாரியங்களும் அதில் உள்ள அம்சங்களைப் பின்பற்றியே கல்வித் திட்டத்தை வகுக்கின்றன.

அதன்படி,  இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. தங்களது குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியை அளிக்க வேண்டும் என்பது பற்றிய உரிமை பெற்றோர்களுக்கு இருக்கிறது என்பத உள்பட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தற்போது புதிய நெறிமுறைகளை வெளியிட்டுஉள்ளது. அதில்,

3 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழியில் பாடங்களைக் கற்பிப்பதே சிறந்தது

வேறு மொழிகள் கற்பிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அதனை படிப்படியாகவே அமல்படுத்த வேண்டும் 

புதிய மொழிகளை சைகையில் கற்றுத் தரலாம் 

மழலையர் பள்ளிகளில் எந்தவிதமான வாய்மொழித் தேர்வோ, எழுத்துத் தேர்வோ நடத்தக் கூடாது 

மேலும் மாணவரின் தேர்ச்சி அல்லது தோல்வி தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது

குழந்தையின் பலவீனத்தை வெளிக்காட்டும் வகையில் ஆசிரியர்கள் செயல்படக் கூடாது

பாடல், நடனம் போன்ற அபிநயங்கள் மூலம் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்

தேவையற்ற அழுத்தத்தை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது

 வீட்டுப்பாடங்கள் எழுதி வரச் செய்து மாணவரிடம் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடாது

இவ்வாறு புதிய பரிந்துரைகளை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.