மாஸ்கோ:
இந்தோனேசியாவுக்கு சுகோய் எஸ்யு&35 ரக போர் விமானங்களை ஏற்றுமதி செய்து அதற்கு பதிலாக பாமாயில், டீ, காபி இறக்குமதி செய்ய ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தோனேசியா அரசின் பி.டி பெருசகான் பெர்டாகன்கன் நிறுவனம் மற்றும் ரஷ்யா அரசின் காங்லோமெரேட் ராஸ்டெக் நிறுவனமும் இதற்கான ஒப்பந்தத்தின் கையெழுத்திட்டிருப்பதாக இந்தோனேசியா வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பான மேலும் விபரங்கள் அடுத்த சில நாட்களின் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் 11 சுகோய் எஸ்யு 35 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்கும்.
இதற்கு பதிலாக காபி, டீ முதல் பாமாயில் வரையிலான பொருட்களை இந்தோனேசியா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஏற்றுமதி செய்யப்படும் மதிப்பு அல்லது அளவு எவ்வளவு என்பதை இந்தோனேசியா வெளியிடப்படவில்லை.
இந்தோனேசியா-ரஷ்யா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இந் தோ«னிசியா வர்த்தக துறை அமைச்சர் என்கர்டியஸ்டோ லுகிதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்தகைய பொருட்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்களுக்கு இந்தோனேசியா ஏற்றுமதி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு 411 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா, கல்வி, எரிசக்தி, தொழில்நுட்பம், விமான போக்குவரத்து போன்றவற்றிலும் வர்த்தக உறவை மேம்படுத்த இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.
இதேபோல் இந்தியாவும் டீ. காபியை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து ராணுவ தளவாட பொருட்களை வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.