அனம்ப்ரா:

நைஜீரியா நாட்டின் அனம்ப்ரா மாகாணத்தின் ஒழுபுலுவில் உள்ள செயின்ட் பிலிப் கேத்தலிக் தேவாலயத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் பலியாகினர்.

மேலும் சிலர் காயமடைந்தனர். இச்சம்பவம் அதிகாலையில் நடந்தது. சம்பவம் நடந்தபோது சர்ச்சில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு பிராத்தனையில் இருந்தனர்.

போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.