நாசிக்: நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, அங்கு பணி செய்பவர்களிடையா லவ்ஜிகாத் மற்றும் மிரட்டி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுவந்த இளம்பெண்ணான நிடாகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்மீதான புகாரில், நிடாகான் பல இளம்பெண்களிடம் மிரட்டி, லக் ஜிகாத், மதமாற்றம் போன்றவை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென தலைமறைவான நிடாகான், சுமார் 25 நாட்களுக்கு பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாசிக்கில் பிரபலமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. அங்கு மென்பொருள் மற்றும் பிபிஓ அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக 2026ம் ஆண்டு கடந்த பிப்ரவரியில் புகார் எழுந்தது.
இதையடுத்து உண்மை நிலவரத்தை கண்டறிய நாசிக் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அந்த அலுவலகத்திலேயே துாய்மை பணியாளர்களாக நான்கு பெண் போலீசார் உட்பட பலர் பணியில் சேர்ந்தனர். இந்த ரகசிய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகருடன் குற்றஞ்சாட்டப்பட்ட டி.சி.எஸ்., நிறுவன ஊழியர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதான, ‘டீம் லீடர்கள்’, சக ஊழியர்களை முஸ்லிம் நடைமுறைகளை பின்பற்றும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது. இதற்கு தலைமையாக எச்.ஆர் மானேஜர் நிடாகான் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட டிசிஎஸ் நிறுவனத்தின் எச்.ஆர் மேலாளரான நிடா கான் தலைமறைவானார்.
அவரை தேடும் பணி தொடர்ந்த நிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு அவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 25 வயதான நிடா கான், 2021ல் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பணியில் சேர்ந்து இருக்கிறார். இவர்மீது, பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான ஒன்பது புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதில் நிடா கான்தான் முக்கிய குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது.
தற்போது நிடாகான் டிசிஎஸ் கம்பெனியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் இன்று (மே 08) அதிகாலை சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசிஎஸ் – லவ்ஜிகாத் பின்னணி என்ன?
இந்த சர்ச்சையானத 2026 மார்ச் 26 வெளியானது. நாசிக்கில் அமைந்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அலுவலகத்தில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர், அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு எதிராக காவல்நிலையத்தில், புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றுதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டேனிஷ் ஷேக், தௌசிஃப் அத்தார் மற்றும் நிதா கான் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், புகாரைப் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்ட பெண் மிகவும் பயந்திருந்தார், மேலும் புகார் அளிக்கும் மனநிலையில் அவர் இல்லை. காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை அளித்து, தைரியம் கொடுத்தனர், அதன் பிறகு அவர் புகாரைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்து.
அதன்படி, மார்ச் 26 அன்று முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளுக்கு இடையில் மேலும் எட்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த எஃப்ஐஆர்கள் நாசிக்கில் உள்ள மும்பை நாகா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்தச் சம்பவங்கள் 2022 முதல் 2026 வரையிலான நான்கு ஆண்டு காலத்தில் டிசிஎஸ் நிறுவன அலுவலகத்தில் நடந்ததாக இந்த புகார்களில் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த ஒன்பது வழக்குகளின் விசாரணை நாசிக் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வெவ்வேறு நாட்களில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான விஷயம் மதமாற்றம் மற்றும் லக் ஜிகாத் தொடர்பானது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சில ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை விவரிக்க பல்வேறு சொற்களைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
“பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது வழக்குகளில், மதமாற்ற முயற்சி, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடத்து, ஒரு காவல்துறை குழு டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் பேசி, புகார் அளித்த வர்களை முன்வரச் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பக்கட்ட புகாருக்குப் பிறகு, சீருடை அணியாத பெண் காவல்துறை அதிகாரிகள் டிசிஎஸ் அலுவலகத்திற்குச் சென்று சில பெண்களிடம் பேசி, அவர்களை புகாரளிக்க முன்வருமாறு ஊக்கப்படுத்தியதைத் தொடர்ந்து கூடுதல் புகார்கள் பெறப்பட்டதாகவும், அதன்பிறகே, மார்ச் 26 அன்று முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் நாசிக் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இந்த விஷயத்தில் எவ்விதப் புகாரும் எங்களது போஷ் கமிட்டிக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது” என்று ஏப்ரல் 17-ஆம் தேதியிட்ட டிசிஎஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.‘
இதற்கு பதில் அளித்த காவல்துறையினர், ”குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒரு குழுத் தலைவராகவோ அல்லது உயர் பதவியில் இருந்தவராகவோ இருந்திருக்கக் கூடும். அதனாலேயே பெண்கள் இத்தனை ஆண்டுகளாக மௌனம் காத்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளனர்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் இந்த குற்றச்சாட்டுக்களை உண்மை என தெரிவித்துள்ளானர்., அந்நிறுவனத்தின் நாசிக் அலுவலகத்தில் உள்ள குழுத் தலைவர்கள் தங்களது மேசைகளை அலுவல் பணிகளுக்காகப் பயன்படுத்தாமல், பெண் சக ஊழியர்களை மனரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் சுரண்டு எவதற்காகப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும், குறிப்பாக அவர்களின் தகவல் தொடர்பு முறை, முற்றிலும் அநாகரிகமாக இருந்தது. பெண்கள் TL மேசைக்கு அழைக்கப்பட்டு, எந்தவொரு தொழில்முறை அல்லது வணிக அலுவலகத்திலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆபாசமான வார்த்தைகளால் தாக்கப்பட்டனர்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், முக்கியக் குற்றவாளியான தௌசிஃப் அத்தார், இந்து மத நடைமுறைகளைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. பண்டிகைகளின் போது பெண் ஊழியர்கள் புடவை அல்லது பொட்டு அணிந்திருந்தால், அவர் அவர்களைத் திரும்பத் திரும்பக் கேலி செய்ததாக அந்த ஊழியர் கூறினார்.
“எல்லாப் பண்டிகைகளின் போதும், நாங்கள் புடவை அணியும்போது, அவர் எங்கள் உடையையும் மதத்தையும் கேள்விக்குள்ளாக்குவார். நாங்கள் கிளம்பும்போது, அவர் கூறும் கருத்துக்களைக் கேட்டு, ஒரு குழுத் தலைவர் எப்படி மற்றொரு மதத்தை இவ்வளவு கேலி செய்ய முடியும் என்று நாங்கள் கேள்வி கேட்கத் தொடங்கினோம்,” அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டு, தாங்கள் மிரட்டப்ட்டதாக கூறியுள்ளனர்.
அதுபோல ஒரு ஊழியர், தனதுமத நம்பிக்கையின்படி, பணிக்கு வரும்போழ, ருத்ராட்ச மாலை அணிந்து வந்த நிலையில், அவர் லவ்ஜிகாத்மூலம் கட்டாய மதம் மாற்றப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் எச்ஆர் மேலளரான நிடாகானே தலைமையாக இருந்து செயல்பட்டு வந்ததாகவும், இதற்காக சக ஊழியர்களை வார விடுமுறையின்போது ரிசாரட்டுகளுக்கு அழைத்துச்சென்று கேளிக்கையில் ஈடுபட வைத்து மத மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, அலுவலகத் தளத்தில் சிலர், இருந்தபடியே வார இறுதி நாட்களுக்காக ஹோட்டல்களையும் ரிசார்ட்டுகளையும் முன்பதிவு செய்ததாகவும், இளம் பெண் ஊழியர்களைத் தங்களுடன் சேருமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு முன்னாள் ஊழியரிடமிருந்து வந்திருந்தாலும், டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் பணிபுரியும் எட்டு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக முன்வைத்த பல புகார்களின் ஒரு பகுதியாகவும் இவை உள்ளன.
ஏமாற்றுத்தனமான மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், வழக்கறிஞர் அஸ்வனி துபே மூலம், அதே பொருள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கில் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். நாசிக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மதமாற்றம் “நாடு முழுவதும் உள்ள குடிமக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வஞ்சகமான மதமாற்றமானது இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம், சகோதரத்துவம், கண்ணியம், ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அது வாதிடுகிறது.
கட்டாய மதமாற்றம் என்பது ஒரு திட்டமிட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வற்புறுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது என அந்த மனு வாதிடுகிறது.
நாசிக் காவல்துறையினர், டிசிஎஸ் கிளை தொடர்பான மன உளைச்சல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்த ஒன்பது புகார்களை விசாரித்து வருகின்றனர். எட்டு பெண் ஊழியர்களால் பதிவு செய்யப்பட்ட இந்தப் புகார்கள், பிப்ரவரி 2022 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவை.
கடந்த வாரம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. டேனிஷ் ஷேக், தௌசிஃப் அத்தார், ரஸா மேமன், ஷாருக்கான் குரேஷி, ஷஃபி ஷேக், ஆசிஃப் அஃப்தாப் அன்சாரி மற்றும் மனிதவள மேலாளர் நிடா கான் என ஏழு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலே குறிப்பிடப்பட்டவர்களுடன் தொடர்புடைய மற்றொரு பெண் ஊழியர் நிடாகான் தலைமறைவான நிலையில் சுமார் 25 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று (மே 8ந்தேதி) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் டிசிஎஸ் நிறுவனத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]