டில்லி

டி சி எஸ் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் கைக்கடிகாரம் பரிசுக்கு பதில் நகை அல்லது வீடு அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

டி சி எஸ் என அழைக்கப்படும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த 50 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாட நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக உலகெங்கும் உள்ள அனைத்து டி சி எஸ் ஊழியர்களுக்கும் நிர்வாகம் பரிசளிப்பதாக அறிவித்தது. ஊழியர்களும் மிகப் பெரிய நிறுவமான டாடா நிறுவனம் அளிக்கும் பரிசை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

டாடா நிறுவனம் பல துறைகளிலும் கால் பதித்துள்ளதால் ஊழியர்கள் தங்களுக்கு அந்த நிறுவன உற்பத்திப் பொருட்களில் ஒன்று அளிக்கப்படும் என அவலுடன் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்பு நிறைவேறியும் அவர்களால் திருப்தி அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் தயாரிப்பான டைடான் கைக்கடியாரங்கள் பரிசாக அளிக்கப்படும் என டி சி எஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து ஒரு உயரதிகாரி, “கடந்த வருடத்தில் இருந்தே எங்களுக்கு அளிக்க உள்ள பரிசுகள் பற்றி பல யூகங்கள் செய்து வந்தோம். டாடா நிறுவனம் உற்பத்தி செய்யும் கார், நகைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் இருக்கும் போது அதில் ஏதாவது பரிசாக அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஒரு சிலர் ரொக்கமாக பெரிய தொகை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு வருடம் காத்திருந்ததற்கு தற்போது மிகப் பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.