சென்னை

பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ரூ. 16 கோடி மோச்டி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ரவீந்தர் சந்திரசேகர் ஒரு பட அதிபர் ஆவார்.  இவர் ‘நட்புனா என்னானு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார்.

ரவீந்த்ரின் மனைவி பிரபல தொலைக்காட்சி. நடிகைமகாலட்சுமி திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையைச் சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி பாலாஜி கபா என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

மனுவில்,

 ‘பட அதிபர் ரவீந்தர், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.200 கோடி என்றும், இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். 

அதை உண்மை என்று நம்பி ரூ.16 கோடி வரை முதலீடு செய்தேன். அவர் என்னிடம், போலி ஆவணங்களைக் காண்பித்து ஏமாற்றி விட்டார்.   நான் கொடுத்த பணத்தைத் திரும்பத் தர மறுப்பதால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்’

என்று கூறியிருந்தார்.

 

விசாரணையில், பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானதையொட்டி. அவர் தலைமறைவு ஆனார். தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில் பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் தனது மனைவியான நடிகை மகாலட்சுமியைப் பார்ப்பதற்கு அசோக் நகர் இல்லத்துக்கு வந்திருப்பதாகத் தனிப்படை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

தனிப்படை காவல்துறையின்ர் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். வீட்டில் சோதனையும் போட்டார்கள். இதில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், அவருடைய பாஸ்போர்ட், வங்கி புத்தகம் போன்றவற்றை  கைப்பற்றிய காவல்துறையினர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.