சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொகுதி வரையறை பற்றி தெளிவான விளக்கம் அலிக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

 

கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு நடந்த கூடத்தில் தெலங்கானா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட 7 மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.கள் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து மீண்டும் தமிழக முத;வ்ச்ர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டதோடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமியை விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ்த்தில்,

“2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜக-வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.