டில்லி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட செல்ஃபோன் பாகங்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அரசு ஊக்கம் அளித்து வருகிறது.  அவ்வகையில் பிரதமர் மோடி அறிவித்த “மேக் இந்தியா” திட்டம் செயல் பட்டு வருகிறது.   அதை ஒட்டி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டியாக வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அரசு வரியை அதிகப் படுத்தி வருகின்றது.

தற்போது செல்ஃபோன் பாகங்களான அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள்,  பிராசசர்கள், கனெக்டர் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.   அத்துடன் செல்ஃபோனில் பொருத்தப்படும் புகைப்பட கருவியும் இறக்குமதி செய்யப்படுகிறது,.

இந்தப் பொருட்களுக்கு மத்திய அரசு 10% கூடுதல் வரி விதித்துள்ளது.   அத்துடன் புகைப்பட கருவிகளுக்கும் கனெக்டர்களுக்கு மேலும் 10% கூடுதல் தீர்வை வரி விதித்துள்ளது.   இந்த வரி விதிப்பு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.