சென்னை: தமிழகத்திற்கு ரூ.8 கோடி மதிப்பிலான கொரோனா பரிசோதனைக்கான 40,032 பிசிஆர் கிட்கள், டாடா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 1,204 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வீட்டுக் கண்காணிப்பில் 28,711 பேரும், அரசுக் கண்காணிப்பில் 135 பேரும் உள்ளனர்.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள், பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், டாடா நிறுவனம், தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய உதவும் 40,032 பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
ரூ.8 கோடி மதிப்பிலான இந்த பரிசோதனைக் கருவிகளை வழங்கியதற்காக முதல்வர் பழனிச்சாமி டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.