டில்லி,

த்தன் டாட்டாவின் கனவு தயாரிப்பான குறைவிலை காரான நானோ காரின் தயாரிப்பை கைவிட டாட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கார்களை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பது ரத்தன் டாட்டாவின் விருப்பம். அதன் காரணமாக குறைந்த விலையில் நானோ கார் தயாரிப்பில் டாடா நிறுவனம் ஈடுபட்டது.

ஆனால், இந்த கார் பொதுமக்களிடம் போதுமான அளவு வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், டாட்டா நானோ கார், மற்றும் டாடா சுமோ போன்ற வாகனங்களின் தயாரிப்பை நிறுத்த டாட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டாட்டா மோட்டார்ஸ் மார்க்கெடிங்  தலைமை நிர்வாகி, ஸ்ரீவத்சவா கூறியதாவது,

அடுத்த 4 நான்கு ஆண்டுகளில் வாகனங்களில் பெரும் மாற்றத்தை கொண்டுவர டாட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வரும் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 4 புதிய வகை கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் காரணமாக ஒருசில பழைய மாடல் கார்களை தயாரிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் டாடா டிகோர் (Tata Tigor) என்ற புதிய காரை அறிமுகப்பப்டுத்தி இருந்தது.

இந்நிலையில் தயாரிப்பில் ஏற்படும் நஷ்டம் காரணமாக நானோ கார் உள்பட, டாட்டா சுமோ, டாட்டா இன்டிகா, இன்டிகோ சிஎஸ் போன்ற கார்ககள் தயாரிப்பை கைவிட டாட்டா முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.