தகவல் அறியும் சட்டம் : கவர்னருக்கும் சீஃப் ஜஸ்டிஸுக்கும் கூட செல்லும்

டில்லி

சீஃப் ஜஸ்டிஸ் மற்றும் கவர்னர் ஆகியோரின் அலுவலகங்களும் தகவல் அறியும் சட்டத்தின் கிழ் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது.

கோவாவின் முந்தைய எதிர்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான மனோகர் பாரிக்கர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கவர்னர் அலுவலகம், மற்றும் சீஃப் ஜஸ்டிஸின் அலுவலகம் ஆகியவையும் கொண்டுவரப்பட வேண்டும் என முன்பு வழக்கு தொடுத்திருந்தார்.  அது அருண் மிஸ்ரா மற்றும் அமித்வா ராய் ஆகிய நீதியரசர்கள் அமைந்த பென்ச்சின் கீழ் விசாரணையில் இருந்தது.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் கவர்னர் அலுவலகமும், சீஃப் ஜஸ்டிஸ் அலுவலகமும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

 


English Summary
Sc confirmed that the offices of Chief Justice and Governor is coming under RTI