டில்லி

ர் இந்தியா நிறுவனத்தின் புதிய உரிமையாளரான டாடா நிறுவன தலைவர் ஏர் இந்தியா ஊழியர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஏலத்தில் வாங்கி உள்ளது.   இந்த நிறுவனம் 69 வருடங்களுக்கு முன்பு டாடா நிறுவனமாக இருந்தது.   அதன் பிறகு அரசுடைமையாக்கப்பட்டது  தற்போது அதே நிறுவனத்தை டாடா மீண்டும் விலைக்கு வாங்கி உள்ளது.  இன்று அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்துக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து டாடா குழுமத் தலைவர் என் சந்திரசேகரன் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

”அன்புள்ள ஏர் இந்தியா குடும்ப உறுப்பினர்களே

இந்த அறிவிப்பு வந்த நாளில் இருந்தே அனைவரும் உச்சரிக்கும் ஒரே வார்த்தை வீடு திரும்புதல் என்பதாகும்.   நாங்கள் ஏர் இந்தியாவை இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டாடா குடும்பத்துடன் இணைப்பதில் பெருமை அடைகிறோம்.

நானும் மற்றவர்களைப் போல் ஏர் இந்தியா டாடாவுடன் இருந்த முந்தைய நிகழ்வுகள் குறித்து கேள்விப்பட்டுள்ளேன்.   நான் ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 14986 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதலில் பயணம் செய்தேன்.   அந்த விசேஷ தருணத்தை நான் எப்போதும் மறக்க மாட்டேன். 

இது போல நினைவுகள் மிகவும் அருமையானவை,   ஆனால் நாம் இப்போது மேற்கொண்டு நடக்க வேண்டியதை கவனிக்க வேண்டு,  நாட்டுக்கு தேவையான வகையில் இந்த விமானச் சேவை நிறுவனத்தை நாம், எப்படி நடத்தப் போகிறோம் என்பதை நாடே உற்று நோக்கிய வண்ணம் உள்ளது.  எனவே நாம் எதிர்காலத் திட்டத்தை கவனிக்க வேண்டும்.

நான் இந்த கடிதத்தின் மூலம் உங்களை டாடா குழுமத்துக்கு வரவேற்கிறேன்.   நமது குழுவுக்குக் கடந்த கால வெற்றிகள் நிறைய உள்ளன.  நான் அதை மீண்டும் நிலைநிறுத்த நாம் அனைவரும் சேர்ந்து பாடு பட வேண்டும்.  இது சிறிது கடினமான பணி என்றாலும் நாம் அனைவரும் இணைந்து இதை வெற்றிச் சரித்திரம் ஆக்குவோம்.

ஏர் இந்தியாவின் பொன்னான எதிர்காலம் நம் முன்னே உள்ளது .  அதில் நமது பயணம் தற்போது தொடங்கி உள்ளது.

நல்வரவு, மீண்டும் நல்வரவு”

எனத் தெரிவித்துள்ளார்.