திருச்சி:
திருச்சி துவாக்குடி அருகே உள்ள கீழ மாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விற்ற மாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டார்
ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் மே 7-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் திறந்திருந்த கடைகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் மூடப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி துவாக்குடி அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், திருச்சி துவாக்குடி அருகே உள்ள கீழ மாங்காவனம் பகுதியில் மதுவிற்பனை செய்தவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், மதுவிற்பனை செய்தவர் பெயர் காத்திகேயன் என்பதும், அவர், அந்த பகுதியில் உள்ள  டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் என்பது தெரிய வந்தது.  டாஸ்மாக் கடையை திருட்டுத்தனமாக திறந்து, மதுபாட்டில்களை திருடி, வேறு இடத்தில் வைத்து அவர் விற்பனை செய்து வந்தாகவும், அவருக்கு எடுபிடியாக மேலும் 2பேர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததுடன்,  அவர்களிடம் இருந்து 103 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.