சென்னை: போதைப்பொருட்களை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை போல, இளையை சமுதாயத்தை அழிக்கும் டாஸ்மாக்கையும் ஒழிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேமுதிகதலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் மற்றும் டாஸ்மாக் குடியால், பாலியல் வன்முறை சம்பவங்கள், கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. சிறுவர்கள் மூலம் பெரியர்கள் வரை மட்டுமின்றி, பள்ளி மாணவ மாணவிகளும் போதைப்பொருட்களுக்கும் மது அருந்தும் பழக்கத்தில் ஈடுபடத்தொடங்கி உள்ளனர். இது பேரதிர்ச்சியாக உள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ள டிவிட்டில், ‘இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு
அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்.’
இவ்வாறு கூறி உள்ளார்.