சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக், சலூன், டீக்கடை, போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 7ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடையந்த இருந்த நிடிலயில், மேலும் ஒருவாரத்துக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகளும், சென்னை உள்ளிட்ட எஞ்சிய 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நோய்த்தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், தொற்று பரவாமல் தடுத்து மக்களின் உயிரைக் காக்கும் நோக்கத்திலும் முழு ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் ஜூன் 14 காலை 6 மணி வரை மேலும் ஒருவாரக் காலத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தொற்று அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தளர்வுகள் குறைவாகவும், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகள் சற்று அதிகமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், ஏற்கனவே அமலில் உள்ளபடி,டாஸ்மாக், சலூன்மற்றும்தேநீர்கடைகள்செயல்படவும்அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கும் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 14-ம் தேதி வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.