சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் பண்டியையொடி, ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு டாஸ்மாக் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மாட்டு பொங்கல் விழாவும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்த 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைக விடுமுறைள் இயங்காது என்பதால், மது பிரியர்கள் பெட்டிப்பெட்டியாக மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக துரையில் ரூ68.76 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல வாரியாக சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், திருச்சியில் ரூ.65.52 கோடிக்கும், சேலத்தில் ரூ63.87 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வரும் 18ஆம் தேதி வடலூர் வள்ளலார் நினைவு நாள் என்பதால் அன்றைய தினமும் மூடப்படும் என்றும், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் அன்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படாது என்றும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.