சென்னை: 2023-24 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.45,855.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் வாட் வரியில் ₹35,081.39 கோடியும், கலால் வருமானம் ₹10,774.28 கோடியும் அடங்கும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட  நிலையில், நேற்றைய 2வது நாள் பேரவை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, டாஸ்மாக் விற்பனை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் இலாகாவை வைத்திருக்கும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, தனது துறைக்கான மானியக் கோரிக்கையை முன்வைத்து பேசினார். அப்போது, மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) மூலம் மது விற்பனை 2023-24ல் ரூ.45,000 கோடியை தாண்டியுள்ளது என்று கூறினார்.

மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்ய  4,829 சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் 2,919 பார்கள் உள்ளன. இதன் மூலம், 2023-24ல் ரூ.45,855.67 கோடி.  வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது. இது கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.44,121.13 கோடியாக இருந்த  நிலையில், மேலும் அதிகரித்து, 2023-24ல் ரூ.45,855.67 கோடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, 2019-20ல் ரூ.33,133.24 கோடியிலிருந்து, 2020-21ல் ரூ.33,811.15 கோடியாக உயர்ந்து, 2021-22ல் ரூ.2,500 கோடிக்கு மேல் ரூ.36,050.65 கோடியாக உயர்ந்தது. சமீபத்தில் மாநில அரசு அறிவித்த விலை உயர்வால் வருவாய் அதிகரித்தது.

மேலும்,  அமைச்சர்  கூறுகையில், 2023-24 நிதியாண்டில் விற்பனை ரூ.45,855.67 கோடி 4,829 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் மது விற்பனை மூலம் பெறப்பட்டுள்ளது. இது, மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. டாஸ்மாக், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக்கில் 4,829 சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் 2,919 பார்கள் உள்ளன.

இதன்மூலம், 2023-24 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.45,855.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதில் வாட் வரியில் ₹35,081.39 கோடியும், கலால் வருமானம் ₹10,774.28 கோடியும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.