சென்னை

ன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்கின்றன.

 

File pic

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் இனங்களின் முதல் இடமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளது.    கொரோனா காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட போது அரசு வருமானம் வெகுவாக குறைந்தது.   டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி ஆர்வலர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அரசும் டாஸ்மாக்கை மூடவில்லை.

டாஸ்மாக் மதுபானங்கள் கொரோனா பாதிப்புக்கு முன்பு அதாவது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி அன்Ru விலை உயர்த்தப்பட்டது.    அதே விலை கடந்த 2 ஆண்டுகளாக தொடரப்பட்டது.   இன்ரு முதல் டாஸ்மாக் மது பானங்கள் விலை உயர்த்தப்படுகிறது.  இன்று பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்த உடன் விலை உயர்வு அமலாகிறது.

சாதாரண ரக மதுபானங்கள் குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.,10 உயருகிறது.  மீடியம் மற்றும் உயர் ரக மதுபானக்கள் குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.20 உயருகிறது.  இதை போல் சாதாரண மது பானக்கள் ஆஃப் பாட்டில் விலை ரூ.20, ஃபுல் பாட்டில் விலை ரூ,40 உயருகிறது.   ஆஃப் பாட்டில் மீடியம் மற்றும் உயர் ரகம் ரூ.40, ஃபுல் பாட்டில் ரூ,.80 உயர்கிறது.  பீர் வகைகள் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்கிறது.