நாற்பது நாள் நஷ்டத்தை  வட்டியும், முதலுமாக  அள்ளும் டாஸ்மாக்..

கொரோனாவை பின் தொடர்ந்து வந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தில் 42 நாட்களாக ’’டாஸ்மாக்’ கடைகள் அடைக்கப்பட்டு, இன்று திறக்கப்படுகின்றன.

42 நாட்கள் கடைகள் மூடப்பட்டிருந்ததால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

3 ஆயிரத்து 240 கோடி ரூபாய்.

அதனை ஈடுகட்டும் விதமாக மதுபானங்களின் விலையைத் தமிழக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் ’டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

 அதாவது வட்டியும்,முதலுமாக அள்ளப்போகிறது, டாஸ்மாக்.

இந்த ஆண்டு டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலையைத் தமிழக அரசு இரண்டாம் முறையாக உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம்  7 ஆம் தேதி  மது ரகங்கள் விலையை அதிகரித்து இருந்தது, தமிழக அரசு.

ஒரு கொசுறு தகவல்.

கடந்த நிதி ஆண்டில் டாஸ்மாக் நிறுவனம் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாயை ’’சம்பாதித்து’’ அரசுக்கு அளித்து இருந்தது.

மதுபான விலை உயர்வால் இந்த நிதி ஆண்டில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தமிழக அரசுக்கு டாஸ்மாக் வழங்கியுள்ள ’தீபாவளி போனஸ்?’

– ஏழுமலை வெங்கடேசன்