கடனுக்குக் கையேந்தும் ’’டாஸ்மாக்’’..

ஏழுமலையான்,குபேரனிடம் கடன் வாங்கியதாகச் சொல்லப்படும் கதை, உண்மை என்று நம்பும் வகையிலான ஒரு சம்பவம் இது:

தினம் தோறும் 90 கோடி ரூபாய் சம்பாதித்து,தமிழக அரசிடம் கொடுத்து வந்த நிறுவனம், ‘டாஸ்மாக்’.

ஊரடங்கு காரணமாக இப்போது, கடுமையான நிதி நெருக்கடி.

அரசுக்குச் செலுத்த வேண்டிய ‘வாட்’ வரியை உடனடியாக செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது, டாஸ்மாக்.

கையில் காசு இல்லை.

என்ன செய்வது?

கடன் வாங்கியது.

இந்தியன் வங்கியில் ஆயிரத்து 50 கோடி ரூபாய்க் கடன் பெற்று ‘வாட்’ வரியைக் கட்டியுள்ளது, டாஸ்மாக்.

மீண்டும் வியாபாரம் தொடங்கியதும் கடனை செலுத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தியன் வங்கியும், அவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கொடுத்துள்ளது.

’’இது ஒன்றும் புது விஷயம் அல்ல’’ என்கிறார்கள், டாஸ்மாக் அலுவலர்கள்.

‘’ கடந்த 7 ஆண்டுகளாகவே பொதுத்துறை வங்கிகளிடம் நாங்கள் கடன் பெறுவதும், திருப்பி கொடுப்பதும் வழக்கமான ஒன்று தான்’’ என்றனர், அவர்கள்.

– எழுமலை வெங்கடேசன்