ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்களது முகநூல் பதிவு:
——————
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று சில அரசுகள் முயன்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், “உச்சநீதிமன்றத்திற்கு இப்படி உத்தரவு போட அதிகாரமே இல்லை” என்றொரு போடு போட்டிருக்கிறார் மார்க்கண்டேய கட்ஜு !
அத்தோடு 16,000 கடைகள் மூடப்பட்டதால் ஏகப்பட்ட பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகுமே என்று புலம்பியவர்களுக்கு அமுல் ஒரு அழகான யோசனையைத் தெரிவித்துள்ளது.
16,000 மதுக்கடைகளையும் சூடான பால் மற்றும் பால் பொருள்கள் விற்கும் அங்காடியாக மாற்றுவதற்கு உதவத் தயார் என்றும் இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
மதுவில்லாத சமூகம் உருவாக்க பங்களிப்பு செய்ய முடியும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறது.