சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுகவை சேர்ந்த ரகுபதி எம்எல்ஏ., தமிழகத்தில் டாஸ்மாக் பார் ஏலம் விடப்படுவதில்லை என்றும், முறைகேடாக ஒதுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய ரகுபதி, டாஸ்மாக் வருமானம் குறைய பார்களை ஏலம் விடாமல் போனதுதான் காரணம்; ஏலம் எடுக்க திமுகவினர் தயாராக உள்ளனர் என்று கூறினார்
அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, அனைத்து பார்களும் ஏலம் விடப்பட்டுதான் இயங்கி வருகிறது என்றும், ஏலம் விடப்படாமல் முறைகேடாக எந்த பாரும் நடைபெறவில்லை என்றும், அப்படி நடக்கும் பட்சத்தில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சொல்லும் திமுகவினரே டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுக்க தயாராக இருப்பதாக உண்மையை ஒத்துக்கொண்டார் திமுக எம்எல்ஏ ரகுபதி என்றும் கூறினார்.