ராமநாதபுரம்:
தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் குடி போதையில் புகுந்த போலீசாருக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் உள்ள வீட்டில் இளம்பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று குடிபோதையில் ஒருவர் வீட்டுக்குள் புகுந்ததை கண்ட அந்த வீட்டுப்பெண் கூச்சல் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டிற்குள் புகுந்தவரை வெளியே இழுத்துபோட்டு அடித்து உதைத்தனர்.
விசாரணையில், குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்தவர் அந்த பகுதி டிராபிக் போலீஸ் பிரிவை சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. முழு மது போதையில் வீடு தெரியாமல் அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களால் தாக்கப்பட்ட முருகேசனை மீட்டு அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel