எஸ்ஆர்எம் குழுமம்: விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

Must read

சென்னை: 
காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதில் நிறைய கட்டிங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1-SRM
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் காட்டாங்குளத்தூர் வளாகம், ஏரிகள், கால்வாய், புறம்போக்கு நிலங்கள், பஞ்சமி நிலங்கள் என ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், அக்கல்லூரியின் கட்டடங்கள் , மருத்துவ மனை, மருத்துவ கல்லூரி கட்டிடங்கள்,  விடுதி கட்டடங்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதி மட்டுமே வாங்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது அந்த கட்டிடங்களில் நடைபெற்று வரும் நிர்வாகத்துக்கு தகுந்தவாறு அனுமதி வாங்கவில்லை என்ற  குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இவ்வாறு  சட்டவிதிகளை மீறி  கட்டப்பட்டுள்ள கட்டங்களை  மல்டி ஸ்டோரேஜ் பில்டிங் விதிப்படி இடிப்பதற்கு அரசுக்கு அனைத்து அதிகாரம் உள்ளதாக வழக்கறிஞர்கள்  கருத்து தெரிவித்து உள்ளனர்.   மேலும் இந்த செயலுக்காக எஸ்.ஆர்.எம் நிர்வாகத்துக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.

அரசு இடங்களையோ, ஏரி, கால்வாய் போன்றவற்றை ஆக்கிரமித்தோ கட்டடங்கள் கட்டப்பட்டது உறுதியானால் அந்த நிலங்களை அரசு கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருந்தால் அவற்றை இடிப்பதோடு, அந்நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ரமேஷ் மணிகண்டன் தெரிவித்தார்.
சென்னையில் விதி மீறி கட்டப்படும் கட்டிங்களை சிஎம்டிஏ நிர்வாகம் உடனே கையகப்படுத்தி சீல் வைப்பது வாடிக்கையானது. அதுபோல எஸ்ஆர்எம் குழும வளாகத்திலும் அநேக கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தக்க விசாரணை நடத்தி விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவும் தமிழக அரசு முன் வரவேண்டும் என்றும்,  மேலும்  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் வரும் காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 

More articles

Latest article