மும்முரமான கிரிக்கெட் பயிற்சியில் டாப்சி

தற்போது பயோ பிக் அதிக அளவில் வெளி வருகிறது.   ஏற்கனவே நடிகை சாவித்திரி, நடிகர் என் டி ராமராவ், மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் பயோபிக் வெளியாகியது.  அவ்வரிசையில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதை படமாக உள்ளது.

இந்த படத்துக்கு சபாஷ் மித்து எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இதில் மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்கிறார்.  சபாஷ் மித்து படத்தை ராகுல் தோலாகியா இயக்கி வருகிறார்.  இதில் மிதாலி ராஜ் வேடத்தைத் திறம்படச் செய்ய டாப்சி கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து டாப்சி, “இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடியதில்லை.  வெறும் பார்வையாளராக இருந்துள்ளேன்.  இந்த படத்தில் நடிப்பதை நான் சவாலாக எண்ணுகிறேன்.  இந்த கதாபாத்திரத்தின் அழுத்தம் எனக்குள் உள்ள சிறந்த நடிப்பை நிச்சயம் வெளிப்படுத்தும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்,