தஞ்சை பெரிய கோவிலுக்கு இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம்! உயர்நீதி மன்றம் தீர்ப்பு

Must read

துரை

ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ள நிதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

உலகப்புகழ்பெற்ற  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் எனப்படும் பெரிய கோவில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பிப்ரவரி 5-ந்தேதி  நடைபெற உள்ளது. இதற்கிடையில், குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்றும் ஒரு தரப்பினரும், சமஸ்கிருதத்தில்தான் நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வரிந்து கட்டிக்கொண்டு நீதிமன்றம் சென்றனர்.

இதற்கிடையில்,  பெரியகோவலின் குடமுழுக்கை சிறப்பாக நடத்தும் வகையில், தமிழக தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் கொண்ட 21பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்தது.

இந்த நிலையில், தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும்  என உத்தரவிடக்கோரி பெ மணியரசன் மற்றும் திருமுருகன் ஆகியோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தமிழக அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என கூறியது.  இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பில், தமிழகஅரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும்,  தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும்  குடமுழுக்கு நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற மனுதாரர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது.

More articles

Latest article