சென்னை: மதமாற வலியுறுத்தியதால் தற்கொலை செய்யப்பட்டதாக கூறும் தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை குறித்த வழக்கில்,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து, பள்ளி சார்பல் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அரசின் மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மனுத்தாக்கல் செய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த  12ஆம் வகுப்பு மாணவி லாவண்யா கடந்த மாதம்  பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சில வீடியோக்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை , மாணவி தற்கொலை விவகாரத்தில், கட்டாய மதமாற்ற முயற்சி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருந்தது. இதற்கிடையில், மாணவியின் தற்கொலை விவகாரம் மதமாற்றம் தொடர்பான புகார் இல்லை காலவல்துறை அதிகாரி கூறியதும்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், விசாரணையின்போது, தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இதையடுதுது தற்போது,   தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.