சென்னை: தஞ்சாவூரில் நியோ தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே பல்வேறு நிறுவனங்களால் நிரம்பி உள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.

நியோ டைடர் பார்க் என்று அழைக்கப்படுவது டைட்டில் பார்க்கின் சிறிய அளவிலான கட்டிடமாகும். ஆரம்ப கட்ட அதாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுவதற்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் இந்த கட்டிடங்களில் இருக்கும். இந்த ஐடி பூங்காக்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் அலுவலகத்தை அமைத்து செயல்படலாம். இதுவே நியோ டைடல் பார்க் என அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இந்த வகையான  டைடர் பார்க்  கட்டிடங்கள் சுமார் 50,000 அடி சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி வரையிலான இடத்தில் அமைக்கப்படும். தமிழகத்தில் சுமார் 7 மாவட்டங்களில் இந்த டைடல் மினி பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஆகிய பகுதிகளில் இந்த டைடல் நியோ பார்க்கானது அமைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக,  விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி காட்சி வாயிலாக கடந்த மாதம் இறுதியில் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், தஞ்சை டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா, நிறுவனங்களால் நிரம்பியுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  ,”தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வளர்ச்சியை கொண்டு சேர்க்கவேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றது. தலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்குள் நியோ டைடல்ஸ் பூங்காக்களை கொண்டு வரும் எண்ணத்தை முன்மொழிந்தார், இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆழமாக ஊடுருவி அவரவர் ஊருக்கே வேலை வாய்ப்புகளை கொண்டுவரும் முயற்சியில் அரசு இறங்கியது.டெல்டா பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் கட்டுவது நல்ல பலனை அளிக்காது, காலியாகவே இருக்கும் என பலரும் கூறினார்கள். ஆனால் இன்று, நமது #திராவிட_நாயகன் அவர்கள் டைடல் நியோ கட்டிடத்தை திறந்துவைத்து 15 நாட்களே ஆன நிலையில், ஒட்டுமொத்த 48,444 சதுர அடி வாடகைக்குப் பகிர்ந்த பகுதி முழுவதும் நிறுவனங்களால் நிரம்பியது, “ என  குறிப்பிட்டுள்ளார்.

1200 பேருக்கு வேலைவாய்ப்பு: ஐடி துறையில் கால் பதிக்கும் டாலர் சிட்டி….

தமிழக பட்ஜெட் 2024-25: கோவையில் ஐடி பூங்கா, தஞ்சாவூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் நியோ டைடல் பார்க், விண்வெளிப்பூங்கா, ஜவுளி பூங்கா