மதுரை:

ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)  விழாவை தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று  வலியுறுத்தி மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் கட்டிக்கலை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உலகுக்கு பறைசாற்றி வருகிறது தஞ்சை பெரிய கோவில். இங்குள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று, சுமார்  23 ஆண்டுள் கடந்த நிலையில், இந்த ஆண்டு(2020)  கும்பாபிஷேம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோயிலில் புணரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில்,  குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கும்பாபிஷேகத்தை  தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என  தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத் துறையும் வலியுறுத்தி மதுரை வண்டியூர் வீரராகவப்பெருமாள் மந்தையில் தமிழ் உணர்வாளர்கள், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர், அரசயோகி கருவூறார் அவர்களின் அன்புசித்தர் அடியார்கள் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.