சென்னை: தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சார்ந்த பட்ட மேற்படிப்புகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் டேன்செட் நுழைவுத்தேர்வு, இந்தாண்டு பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. அப்பல்கலையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், மேலாண்மை கல்லூரிகள், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், மேற்கூறிய முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.

எம்இ, எம்சிஏ, எம்டெக், எம்ஆர்க் மற்றும் எம்பிளான் போன்ற படிப்புகளுக்காக இத்தேர்வு நடைபெறுகிறது. 2020ம் கல்வியாண்டில் மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோருக்கு பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1ம் தேதிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜனவரி 7ம் தேதி துவங்கி 31ம் தேதி நிறைவு பெறுகிறது. ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி பிப்ரிவரி 7.

தேர்வு முடிவுகள் மார்ச் 20ம் தேதியே அறிவிக்கப்பட்டு, மார்ச் 23ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று டான்செட் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.