சென்னை:
ஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டும் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த மத்திய அரசின் விழாவில் சம்ஸ்கிருதத்தில் மகா கணபதி மந்திரம் கூறப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற அந்தக் கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக, அப்போது விளக்கமளித்த ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மாணவர்கள் தாமாக முன்வந்து சம்ஸ்கிருதப் பாடலை பாடியதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற 58வது பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பட்டது சர்ச்சையானது. தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதற்கு ஐ.ஐ.டி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.