சென்னை: தமிழர்களே வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காத்து வெல்வோம் ஒன்றாக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களே வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக! பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் புத்தக கண்காட்சி தொடங்கி வைக்கும் நிலையில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், நம் மண்ணின் கைவினைக் கலைஞர்களை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றியுள்ள #கலைஞர்_கைவினைத்_திட்டம் குலத்தொழிலை நிலைநிறுத்தும் சதியான ஒன்றிய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக, சாதிவேறுபாடில்லாமல் எவரும் அவர் விரும்பிய தொழிலை மேற்கொள்ளும் வகையிலான நமது #DravidianModel அரசின் கலைஞர் கைவினைத் திட்டம், 8,000+ கைவினைக் கலைஞர்கள், 145 கோடி ரூபாய் கடனுதவி, 31 கோடி ரூபாய் மானியம் என மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.