சென்னை:
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் இன்று டிரென்டிங்கானது. தமிழகவேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் இந்திய அளவிலும் டிரென்டிங்கானது.
மத்திய அரசு நிறுவனங்களில் குறிப்பாக ரெயில்வேயில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வடமாநில தொழிலாளர்கள்கள் திட்டமிட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த குள்ளநரித் திட்டம் தமிழர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான 18 பொதுத்துறை நிறுவனங் களில் 90 முதல் 100 சதவீதம் வரை அயல் மாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 90லட்சம் பேருக்குமேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன், மத்திய அரசு இனப்பாகுபாடு காட்டி வருகிறது.
மேலும் தேர்வு எழுதினால் அவர்கள் மட்டும் தோல்வியடையுமாறு செய்து வருகிறார்கள்.
எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.. கூடுதலாக பணியமர்த்தப்பட்ட வட மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பெ.மணியரசன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழக அரசு வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை, இருப்பிடச் சான்று கொடுக்கக்கூடாது என்றும் மணியரசன் தெரிவித்தார்.