சென்னை :

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 12 முதல் 19 வரை கன மழை பெய்வதற்கான சாதியக் கூறுகள் உள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி முதல் ஆந்திராவின் காவாலி வரையிலான பல இடங்களில் மழை பெய்யும் என்றும், தீபாவளிக்குப் பிறகு பருவமழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும், ‘தமிழ்நாடு வெதர்மென்’ தகவல் வெளியிட்டிருக்கிறது.

மேலும், வடகிழக்கு பருவமழை துவங்கி 10-ம் தேதி வரை , தமிழகத்தில் 140 மி.மீ. மழையும் சென்னையில் 370 மி.மீ. மழையும் பதிவாகியிருக்கிறது,

நவம்பர் 15 லிருந்து 18 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் கூடும் என்று அதன் இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

காற்றின் திசையும், வேகமும், தமிழகத்தில் மழை பெய்வதற்கு சாதகமாக இருப்பதால், இந்த ஆண்டு பருவமழை டிசம்பர் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.