சென்னை:

மிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப்படிப்புக்கு 460 இடங்கள் உள்ளன.  இதற்கான கால்நடை மருத்துவக்கல்லூரிகள்  சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் உள்ளது.

இங்கு கால்நடை மருத்துவம் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி மே 8ம் தேதி முதல் ஜுன் 10ம் தேதி கொடுக்கப்பட்டிருந்தது.

தற்போது  கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழக  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தரி வரிசை பட்டியல் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 3-ம் வாரத்தில் கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் 360 இடங்களுக்கும், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு 40, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்களுக்கும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்பிடிப்பில் 20 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.