சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு தேவையான, 500 தாழ்தள மின்சார பேருந்து வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரி உள்ளது.
தாழ்தள பேருந்துகள் ஏற்கனவே வாங்கப்பட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 500 தாழ்தள பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. அதற்கான டெண்டர் கோரியுள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படஉ ள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மனி வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சுமார் ரூ.7,492 கோடி மதிப்பில் 5 கட்டமாக பல்வேறு போக்குவரத்து கழக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகள், மொத்த விலை ஒப்பந்த மாதிரி (Gross Cost Contract) முறையில் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. து. , மொத்த விலை ஒப்பந்த மாதிரி (Gross Cost Contract) முறையில் இயக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது OHM Global Mobility Pvt. Ltd., (Subsidiary of Ashok Leyland Ltd & SWITCH Mobility Automotive Limited) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல்-2025 முதல் இம்மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அப்போது, இந்த பேருந்துகள் முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, ஏப்ரல்-2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்கள். நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஒரு முறை மின்னேற்றம் (Charging) செய்தால் சராசரியாக 180 கி.மீ. இயக்க இயலும். நாளொன்றுக்கு சராசரியாக 200 கி.மீ. வரை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதகாவும் கூறியுருந்தார்.
முதல்கட்டாக, குளிர்சாதன வசதியில்லாத 400 மின்சாரப் பேருந்துகளும், குளிர்சாதன வசதியுடன் கூடிய 100 மின்சாரப் பேருந்துகள் என மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-1, பூவிருந்தவல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய 5 பணிமனைகளிலிருந்து இயக்கப்பட உத்தேசிக்கப்பட்டு இருப்பதாகவும்,
இதுமட்டுமின்றி மின்சாரப் பேருந்துகளுக்கு தேவையான மின்னேற்ற கட்டமைப்பை (Electric Charging Infrastructure) தயார் செய்து பராமரிப்பதும் மற்றும் பணிமனையை பராமரிப்பதும் (Depot Maintenance) இயக்குபவரின் (Operator) பொறுப்பாகும் என கூறியிருந்தார்.
தற்போது இயக்கப்படும் டீசல் பேருந்துகள் இயக்குவதற்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் ரூ.116/- செலவிடப்படுகிறது. இந்த புதிய திட்டத்தினால் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான மூலதன செலவுகள் (சுமார் ரூ.875 கோடிகள்), உதிரி பாகங்கள், பராமரிப்பு செலவுகள், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஊதிய செலவுகள் தவிர்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ரூ.22½ கோடியில் வாங்கப்பட்டுள்ள 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் 12 மீட்டர் நீளமுள்ள மேலும், 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை டெண்டர் கோரி உள்ளது. குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று 2 வகையான 500 பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.