தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் மாநில அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில், சென்னை பெரம்பூரில் வசித்து வந்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (வயது 73). கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட த.வெள்ளையன், உடல் நலத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அவர் வசித்து வந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, எச்சரிக்கைப்பட்டு வருகிறது.