சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகிறார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் முப்பெரும் விழாவில், அமைச்சர் உதயநிதி துணைமுதல்வராக அறிவிக்க வேண்டும் என பலர் வேண்டுகோள் விடுத்து பேசிய நிலையில், அதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பு கொளத்தூரில் நடைபெற்ற மக்கள் நல பணி நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கோரிக்கை வலுத்துள்ளதே என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டதற்கு, ”வலுத்துள்ளது ; ஆனால், பழுக்கவில்லை” என்று சொல்லிவிட்டுப் போனார்.

இந்த நிலையில்தான் தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், அமைச்சரவை மாற்றமும் இருக்கலாம் என்கிறார்கள். அதனப்டி  2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பழுத்துவிட்டாரா? வரும் பவுர்ணமி அன்று துணை முதல்வராகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்….?