மயிலாடுதுறை மாவட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Must read

சென்னை:
மிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை (28/12/2020) உதயமாகிறது.

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (28/12/2020) காலை 09.30 மணிக்கு காணொளி மூலம் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

More articles

Latest article