சென்னை,

மிழகத்தில் தற்போதைய பாடத்திட்டம் (சமச்சீர் கல்வி) ஏமாற்றம் தருவதாக உள்ளது என, பாடத்திட்டம் மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரும், முன்னாள் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தற்போதைய பாடத்திட்டத்தால் அடிப்படை அறிவு அற்றவர்களாக மாணவர்கள் உள்ளனர் என்றும் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ‘நீட்’ தேர்வின் அடிப்படையிலேயே உயர்கல்விக்கு மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் பாடத்திட்டம் அகில இந்திய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இல்லை. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த  குழுவில், முனைவர் ஆர்.ராமானுஜம், பேராசிரியர், கணித அறிவியல் நிறுவனம், தரமணி, சென்னை, முனைவர் ஈ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முனைவர்.கு.ராமசாமி, துணைவேந்தர், வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை, சு.தியோடர் பாஸ்கரன், எழுத்தாளர் மற்றும் சூழலியல் ஆய்வாளர், பெங்களூரு, முனைவர் சுல்தான் அஹமது இஸ்மாயில், முன்னாள் துறைத் தலைவர், உயிர் தொழில்நுட்பவியல் துறை, புதுக் கல்லூரி, முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், பேராசிரியர், சென்னை, கலாவிஜயகுமார், கல்வியாளர், சென்னை, டிராட்ஸ்கி – மருது, ஓவியர் அகியோர் உறுப்பினர்களாகவும். சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த குழுவினர் பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு வருகின்ற னர். பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் தபால் அல்லது இணையதளம் மூலமாகக் கருத்து தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக கல்வித்திட்டம் குறித்து பேசிய அனந்தகிருஷ்ணன், தமிழகத்தில் புதிய பாடத்திட்டம்  இன்னும் 6 மாதங்களுக்குள் தயாராகிவிடும், இந்த பாடத்திட்டம்  அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும்  என்று கூறி உள்ளார்.

மேலும், பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை மாற்ற வேண்டும் என்றார்.

தமிழக மாணவர்கள் புத்திசாலிகள். அவர்கள் பாடத்திட்டத்தை மாற்றினால் அதற்கு ஏற்ப வல்லவர்களாக வருவார்கள்.” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று கோவை வந்த அனந்தகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தின் தற்போதைய பாடத்திட்டம் ஏமாற்றம் தருவதாக உள்ளது என்று அதிரடியாக கூறி உள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய பாடதிட்டத்தால் அடிப்படை அறிவற்றவர்களாக மாணவர்கள் விளங்குகின்றனர் என்றும். அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்விமுறை 2014-2015ம் கல்வியாண்டின்போது திமுக அரசால் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.